பொது செய்தி

தமிழ்நாடு

கொட்டித்தீர்க்கும் வடகிழக்கு பருவமழைராமநாதபுரத்தில் சராசரியை விட கூடுதல்

Added : டிச 03, 2019
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தின் சராசரி வட கிழக்கு பருவ மழை அளவான 501.6 மி.மீ., அளவை தாண்டி இதுவரை 643 மி.மீ., பெய்துள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் கன மழையால் நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் வீரராகவ் தண்ணீரை காலியாக கிடக்கும் ஊரணிகளுக்கு கொண்டு செல்ல அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின் அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை சராசரியாக 70.44 மி.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தின் பிரதான மழை வட கிழக்கு பருவ மழையை சார்ந்தே இருக்கிறது. இந்நிலையில் வட கிழக்கு பருவ மழையின் சராசரி அளவான 501 மி.மீ., அளவை கடந்து 643 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் 33 வீடுகள் இதுவரை சேதமடைந்துள்ளன. 25 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. 4 மரங்கள் சாய்ந்துள்ளன. ராமநாதபுரம் பகுதியில் ஆடு ஒன்று மழைக்கு இறந்துள்ளது.மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பிவிட்டன. மண்டபம், தங்கச்சிமடம் பகுதியில் கடல் அலை சீற்றத்தால் படகுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் அங்கிருந்த 120 மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X