பொது செய்தி

தமிழ்நாடு

குவைத் நாட்டில் காணாமல் போனகணவரை மீட்க மனைவி கோரிக்கை

Added : டிச 03, 2019
Advertisement

ராமநாதபுரம்:கடலாடி தாலுகா சேதுராஜபுரத்தை சேர்ந்த முத்துமாரி துபாய் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தனது கணவர் 20 நாட்களுக்கும் மேல் குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதாகவும், அவரை மீட்க கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குழந்தையுடன் மனு அளிக்க வந்திருந்தார்.

அவர் கூறியதாவது:எனக்கு 7 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். நான் சேதுராஜபுரத்தில் வசிக்கிறேன். வயதான மாமனார், மாமியார் என்னுடன் வசிக்கின்றனர். கணவர் ஐந்து ஆண்டுகளாக குவைத் நாட்டில் வீட்டில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். அவரது வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வருகிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா வந்து செல்வார். கடந்தாண்டு வந்து சென்ற கணவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக புகார் செய்து புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு செல்வதாக தெரிவித்தார்.வேலைகள் முடிந்த பின்பு அழைக்கிறேன் என்றவர் அதன் பின் தொடர்பு கொள்ளவில்லை. நான் அவருடைய அலைபேசிக்கு பல முறை தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச் ஆப் ஆகியதாக வந்தது. தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். ஆனால் பலனில்லை. எனது உறவினர்கள் மூலம் தேட சொன்னேன். அவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. எனவே எனது கணவரை மீட்டுத்தர கலெக்டரிடம் மனு அளிக்க வந்துள்ளேன், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X