பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் 3,691 பதவிகளுக்கு தேர்தல்

Added : டிச 03, 2019
Advertisement

ராமநாதபுரம்:டிச., 27, 30ல் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3691 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

கிராமப்புற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிச., 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் டிச.,6ல் துவங்குகிறது. டிச.13 மனு தாக்கல் செய்ய கடைசி நாள். டிச.,16ல் வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். டிச.,18 வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள். டிச.,27ல் முதற்கட்ட ஓட்டுப்பதிவும், டிச.,30ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவும் நடக்கிறது. ஜன.,2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.இதையடுத்து நேற்று முதல் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்கான 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும், 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான 170 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களும், 429 ஊராட்சிகளுக்கான ஊராட்சி தலைவர்களும், 3075 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், என 3,691 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி, பேரூராட்சிக்களுக்கான தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் தேர்தலுக்கான முதற்கட்ட வேலையை துவக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X