சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோயில் கோபுர கலசம் திருட்டு

Added : டிச 03, 2019
Advertisement

கமுதி:கமுதி அருகே எம்.புதுக்குளத்தில் பழமையான முனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, ஐம்பொன்னாலான கோபுர கலசத்தை வைத்து பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபட்டனர். 2017 ல், அப்பகுதியில் பெய்த மழையின் போது கோபுரக் கலசம் மீது இடி தாக்கியது. இந்த நிலையில் கோபுர கலசத்தின் மீது இடி தாக்கினால், அக்கலசத்தில் இருந்து இருடியம் என்ற பொருள் கிடைப்பதாகவும், அது மிக அதிக விலைக்கு உலக சந்தையில் விற்கப்படுவதாக நம்பப்பட்டுகிறது.இதையடுத்து மர்ம கும்பல் இதனை நோட்டமிட்டு கோபுரத்தின் மீது இருந்த ஐம்பொன் கலசத்தை திருடிச் சென்றனர்.கோவிலாங்குளம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், அருப்புகோட்டை பகுதிகளில் கலசத்தை திருடும் மர்ம கும்பல் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று விசாரணை நடத்தினர்.இதில் விருதுநகர் மாவட்டம் அகரத்துபட்டியை சேர்ந்த செல்வம் 38, மதுரை மாவட்டம் கோக்கலாம்சேரியை சேர்ந்த அலெக்ஸ் 30, ஆகிய இருவரும் எம்.புதுக்குளம் கோயில் கோபுர கலசத்தை திருடியவர்கள், என தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும், கோவிலாங்குளம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X