கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி

Added : டிச 03, 2019 | கருத்துகள் (3)
கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி

புதுடில்லி : இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக சப் - லெப்டினென்ட் ஷிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியக் கடற்படை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சப் - லெப்டினென்ட் ஷிவாங்கி இந்தியக் கடற்படையின் முதல் பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பீஹார் மாநிலம் முசாபராபாதில் பிறந்தவர். கடற்படையில் இணைந்த ஷிவாங்கி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள இந்திய விமானப்படை அகாடமியில் இந்தாண்டு ஜூனில் பயிற்சிக்காக சேர்கப்பட்டார்.தற்போது விமானியாக கடற்படையில்இணைந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் இவர் பணியாற்றுவார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X