பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் தீருமா

Added : டிச 03, 2019
Advertisement

திருப்புவனம்:திருப்புவனத்தில் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டும் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை. நரிக்குடி ரோடு, சிவகங்கை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவிப்பிற்குள்ளாகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரோட்டில் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர்.தொடர்ச்சியாக வாகனங்கள் செல்வதால் ரோட்டை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். போலீசார் நீண்டநேரம் நிற்க முடியாத நிலை உள்ளதால் போக்குவரத்து போலீசார் ஓய்வெடுக்கவும், அமர்ந்தவாறே போக்குவரத்தை சரி செய்ய கூண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டது. தனியார் அமைப்புகளின் மூலம் நிதி வசூலித்து நரிக்குடி ரோட்டில் பெயின்ட் கம்பெனி அருகிலும் நரிக்குடி ரோட்டில் ஒரு கூண்டும் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பணி நடக்காமல் தள்ளி போகிறது. மக்களின் பிரச்னையை தீர்க்க இப்பகுதியில் போலீசாருக்கு கூண்டு அமைத்து நெரிசலை தீர்க்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X