குழிகள் நிறைந்த சாலையால் பரிதவிக்கும் சிங்கம்புணரி மக்கள்

Added : டிச 03, 2019
Share
Advertisement
சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் மாநில நெடுஞ்சாலை முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.சிங்கம்புணரியில் தற்போது பெய்துவரும் மழையால் சாலைகள் முன்பு இருந்ததைவிட மிகவும் மோசமாக பெரிய பெரிய பள்ளங்களாக மாறி உள்ளது.சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளங்கள் தெரியாமல் இரவில் 50க்கும்

சிங்கம்புணரி:சிங்கம்புணரியில் மாநில நெடுஞ்சாலை முதல் தேசிய நெடுஞ்சாலை வரை அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.சிங்கம்புணரியில் தற்போது பெய்துவரும் மழையால் சாலைகள் முன்பு இருந்ததைவிட மிகவும் மோசமாக பெரிய பெரிய பள்ளங்களாக மாறி உள்ளது.சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளங்கள் தெரியாமல் இரவில் 50க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். சாலையில் விபத்து ஏற்படுவதை தடுக்க சிங்கம்புணரி காவல்துறையால் பேருந்து நிலையம், அரசு பள்ளி எதிரே உள்ள பெரிய பள்ளங்களில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்-காரைக்குடி சாலை கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.சிங்கம்புணரியில் உள்ள மாநில நெடுஞ்சாலை அதிகாரிகள் இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதால் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை அவர்கள் தான் பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். சிங்கம்புணரி- மேலுார் மாநில நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக மோசமாக உள்ளது அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக சீரணி அரங்கம் அருகில் சாலை பள்ளமாகவும் சேரும் சகதியுமாக உள்ளதால் மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X