25 ஆண்டுகளாக சாலையில்லாமல் மக்கள்

Added : டிச 03, 2019
Advertisement

காரைக்குடி:காரைக்குடி வ.உ.சி.சாலை செல்லஞ்செட்டிஊரணி பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதியின்றிஅவதிப்படுகின்றனர்.காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட முதல் வார்டில் வ.உ.சி சாலை அருகே உள்ளது செல்லஞ்செட்டி ஊரணி. இப்பகுதியில்,40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகஇங்கு சாலை வசதி இல்லை.தற்போது பெய்யும்மழையால், சகதி நிறைந்த இப்பாதையில் பாதசாரிகளும், வாகனஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சர்வேயில், 13மீட்டர் அகலத்திற்கு பாதை ஒதுக்கப்பட்டும்,தற்போது4 மீட்டர் கூட பாதை இல்லை. தவிர, சாலையின் நடுவே ஆங்காங்கேமின்கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது.எனவே, இப்பகுதிக்கு ரோடு அமைத்து தரநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அப்பகுதியை சேர்ந்த காந்தி கூறுகையில்;செல்லஞ்செட்டி ஊரணி பகுதியில் பொதுப்பாதை அமைக்க 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம். இதுகுறித்து,நகராட்சி, வருவாய்த்துறையினருக்கு பலமுறை மனுஅளித்துவிட்டோம். புதுக்கண்மாய் மேல்புறம் உள்ள கரையைபலப்படுத்தி சாலை அமைத்தால் எளிதாக இருக்கும். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X