சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Added : டிச 03, 2019
Share
Advertisement
மானாமதுரை:மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளநாடு கிராமத்திற்கு தண்ணீர் வேண்டியும்,குறைந்தழுத்த மின்சாரத்தை சரி செய்ய கோரி கிராம மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மானாமதுரை அருகே மேலப்பசளை ஊராட்சிக்குட்பட்ட வளநாடு கிராமத்தில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் தண்ணீர் தேவைக்காக ஊருக்குள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு

மானாமதுரை:மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வளநாடு கிராமத்திற்கு தண்ணீர் வேண்டியும்,குறைந்தழுத்த மின்சாரத்தை சரி செய்ய கோரி கிராம மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மானாமதுரை அருகே மேலப்பசளை ஊராட்சிக்குட்பட்ட வளநாடு கிராமத்தில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் தண்ணீர் தேவைக்காக ஊருக்குள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பழுதானதை தொடர்ந்து இன்று வரை சீரமைக்கப்படாததால் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.குடிநீர் வாரத்திற்கு ஒரு முறை தான் வருவதாகவும் அதுவும் குறைந்த நேரமே வருவதால் தண்ணீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாகவும்,ஒரு குடம் தண்ணீர் ரூ.10 கொடுத்து வாங்க வேண்டியிருப்பதாக கூறினர்.கடந்த 6 மாதங்களாக வளநாட்டில் குறைந்தழுத்த மின்சாரமே வருவதாகவும்,பல நாட்கள் மின்சாரமே இல்லாமல் இருப்பாதால் இதனை சரி செய்யக் கோரி நேற்று கிராம மக்கள் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X