ஒற்றையர் இறகு பந்து போட்டி

Added : டிச 03, 2019
Advertisement

சிவகங்கை:-ஒற்றையர் இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்று சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் பள்ளி மாணவி கே.அபிராமி மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.தேவகோட்டை டி.பிரிட்டோ பள்ளியில் மாவட்ட அளவில் 14, 17, 19 வயதினருக்கான குழு, தனி நபர் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், தனி நபர் இறகுபந்து போட்டியில் சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் பள்ளி 9 ம் வகுப்பு மாணவி கே.அபிராமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட மாணவியை 21:2 புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இம்மாணவி ஒற்றையர் கேரம் போட்டியில் மாவட்ட அளவில் 2ம் பரிசு பெற்றார். இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்ற இவர், 2020 பிப்., ல் ஈரோட்டில் நடக்க உள்ள மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாவட்ட அளவில் நடந்த குழு போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் கூடைப்பந்து, ஒற்றையர், இரட்டையர் கேரம், கைப்பந்தில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.மரியதெரசா, உடற்கல்வி ஆசிரியை கே.ஜேம்ஸ் சாந்தஷீலா பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X