சிவகங்கை: சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் திட்டியதால், ஆசிரியை சோடியம் கார்பனேட் குடித்ததாக, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.சிவகங்கை டி.புதுார் சேதுராமன் மனைவி சங்கீதா 46. இவர் முத்துப்பட்டி அரசு நடுநிலை பள்ளி அறிவியல் ஆசிரியை. இப்பள்ளி தலைமை ஆசிரியராக சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்த கீதாஞ்சலி உள்ளார். நவ.,27 அன்று காலை 9:20 மணிக்கு பள்ளி இறைவணக்க கூட்டத்தில், அறிவியல் ஆசிரியையை, தலைமை ஆசிரியை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர், ஆய்வகத்தில் இருந்த சோடியம் கார்ப்பனேட் கெமிக்கல்லை குடித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீசில் ஆசிரியை சங்கீதா அளித்த புகாரின்படி, தலைமை ஆசிரியை கீதாஞ்சலி மீது எஸ்.ஐ., ஜான்பிரிட்டோ வழக்கு பதிந்துள்ளார்.ரயிலை மறித்ததாக 40 பேர் மீது வழக்குசிவகங்கை: சிவகங்கை கீழக்கண்டனி அருகே மேலவெள்ளஞ்சி ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தனர். ஆனால், மழை காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுரங்கபாதையை கடந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு கிராமத்தினர் ராமேஸ்வரம்- திருச்சி ரயிலை மறித்தனர். இது குறித்து ரயில்வே பிரிவு பொறியாளர் கடற்கரைதங்கம் போலீசில் புகார் அளித்தார். சிவகங்கை நகர் எஸ்.ஐ., வாசிவம், ரயிலை மறித்ததாக மேல வெள்ளஞ்சியை சேர்ந்த முருகன், லெனின் 28, உட்பட 40 பேர் மீது வழக்கு பதிந்தார்.