சிங்கம்புணரியில் மழையால் வீடுகள் சேதம்| Dinamalar

சிங்கம்புணரியில் மழையால் வீடுகள் சேதம்

Added : டிச 03, 2019

சிங்கம்புணரி:-சிங்கம்புணரியில் தொடர் மழையால் 4 வீடுகள் சேதமடைந்தது.சிங்கம்புணரி அருகே மூவன்பட்டியில் வெள்ளைக்கண்ணு 86 விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 4 பெண் குழந்தைகள் திருமணம் முடிந்து கணவர் வீட்டில் உள்ளனர். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். விவசாய வேலை செய்து விட்டு தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் தனியாக தங்கியிருந்தார்.தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு 10:௦௦ மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீடு இடிந்தது. இடிபாட்டில் சிக்கிய வெள்ளைக்கண்ணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தது.மருதிபட்டி பெரியகருப்பன் மனைவி அழகுரத்தினத்தின் கூரை வீட்டின் ஒரு பகுதி, ஆறுமுகம் மனைவி குமராயி வீட்டில் ஒரு பக்க சுவர்,மருதிப்பட்டி மந்தை அருகே முருகன் மனைவி சத்தியா என்பவர் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்தது.சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம், ஆர்.ஐ. சாந்தி, அதிகாரிகள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X