பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சிகளில் தனிநபர் கழிப்பறை: அதிகாரிகளின் புள்ளிவிவரத்தால் சர்ச்சை

Added : டிச 03, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கை மாவட்ட பேரூராட்சிகளில் 2018-19ல் தனிநபர் கழிப்பறை கட்ட யாரும் விண்ணப்பிக்கவில்லை என்ற அதிகாரிகளின் புள்ளி விபரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.இம்மாவட்டத்தில் 2015 முதல் துாய்மை பாரத இயக்க திட்டம் மூலம் தனிநபர் கழிப்பறை கட்டப்பட்டது. கழிப்பறை ஒன்றிற்கு மத்திய அரசு ரூ. 4 ஆயிரம், மாநில அரசு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி நிர்வாகம் ரூ.2 ஆயிரம் என மொத்தம் 8 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 12 பேரூராட்சிகளிலும் மக்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது. மானியத்தை அரசே நேரடியாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் 3ஆயிரத்து 180 கழிப்பறைகளை மட்டுமே கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவற்றிற்கு விண்ணப்பம் பெறப்பட்டு அதில் 2 ஆயிரத்து 617 மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது.இளையான்குடி, கோட்டையூர், மானாமதுரை, நெற்குப்பை, திருப்புத்துார் பேரூராட்சிகளில் நிர்ணயித்த இலக்கை முழுமையாக எட்டவில்லை. மாவட்டத்தில் 2015-16ல் 1010 ம், 2016-17 ல் 1159 ம், 2017-18 ல் 448 கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ள நிலையில் 2018-19 ல் கழிப்பறை கட்ட எந்த விண்ணப்பங்களும் வரவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கழிப்பறைக்கான நிதி 8 ஆயிரம் போதவில்லை என்று நகர் பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். அதனால் இத்தொகைக்கு யாரும் கழிப்பறை கட்ட முன்வருவதில்லை, வந்தாலும் பாதியிலேயே கைவிட்டு விடுகின்றனர், என்றார்.பேரூராட்சிகளில் இன்னும் பல வீடுகளில் தனிநபர் கழிப்பறை இல்லாத நிலையில், நாட்டை தூய்மைப்படுத்தும் மத்திய அரசின் திட்டமான தனிநபர் கழிப்பறை திட்டத்தை உரிய முறையில் நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X