காரைக்குடி நகராட்சி துவக்கப்பள்ளியை சூழ்ந்த மழைநீர்

Added : டிச 03, 2019
Advertisement

காரைக்குடி:காரைக்குடி நகராட்சி துவக்கப்பள்ளியை சூழ்ந்த மழைநீராலும், பாம்புகள் நடமாட்ட அச்சத்தாலும், பெற்றோர் தங்களது குழந்தைகளை வீட்டிற்கே அழைத்து சென்றனர்.காரைக்குடி தாலுகா அலுவலகம் பின்புறம் 2019பிப்ரவரியில் ரூ.168.77 லட்சம் செலவில், காரைக்குடிநகராட்சி உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.இக்கட்டடத்தில், தற்போது ராமநாதன் செட்டியார் நகராட்சிதுவக்கப்பள்ளி மட்டுமே செயல்படுகிறது. இதில், 635 மாணவர்களும், 14ஆசிரியர்களும் உள்ளனர். கட்டடம் கட்டி ஒரு வருடம் நிறைவு பெறாத நிலையில் மழையால் பள்ளியை சுற்றிலும் மழைநீர் தேங்கிகுளம்போல காட்சியளிக்கிறது.மாணவர்கள் நடப்பதற்கு,பெஞ்ச்சால் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழைநீராலும்,சுற்றியுள்ள புதர் செடிகளாலும்,பள்ளிக்குள் பாம்புகள்நுழைகிறது. இதனைக் கண்ட பெற்றோர் அச்சத்தில் தங்களதுகுழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்ப அழைத்துச்சென்றனர்.நகராட்சி மற்றும் வருவாய் துறையினரிடம்,ஆசிரியர்கள் தெரிவித்ததால் பம்ப்செட் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.பெற்றோர்கள் கூறுகையில்; ஊரணி இருந்த இடத்தில் பள்ளி கட்டப்பட்டுள்ளது.தாழ்வான பகுதி என்பதால்,தண்ணீர் செல்ல வழியில்லை.பள்ளியை சுற்றிலும் புதர்செடி நிறைந்துள்ளதால், பாம்புகள் பள்ளிக்குள்நுழைகிறது.பிள்ளைகளின் நலன் கருதி,அதிகாரிகள் தற்காலிகநடவடிக்கை எடுக்காமல்,நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X