சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்தை மீட்டுத்தரக்கோரி விஷத்துடன் வந்த மூதாட்டி

Added : டிச 03, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அருகே விட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் அரக்காயி 80. இவர் நேற்று காலை 10:30 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமிற்கு மனு கொடுக்க வந்தார்.அவர் கூறியதாவது: எனது கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு மூன்று மகனும், மூன்று மகளும் உள்ளனர். நான் மூத்த மகள் வீட்டில் வசிக்கிறேன். பிரதமர் உதவித்தொகை வாங்கித்தருகிறேன் என்று கூறி எனது பெயரில் உள்ள பத்திரம், ஆதார், வங்கி பாஸ்புக் ஆகியவற்றை மூன்று மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டார். கேட்ட போது அவரது குடும்பத்தினர் என்னை அடிக்கிறார்கள். மகள் வீட்டில் வசிக்கும் எனக்கு சாப்பாட்டு தேவைக்கு அந்த சொத்து இருந்தால் தான் உதவியாக இருக்கும். அவற்றை மீட்டுத்தரக்கோரி கலெக்டரை சந்தித்து மனுகொடுக்க வந்தேன் என்றார். இந்நிலையில் அவர் கொண்டுவந்த பையில் சிறிய பாட்டிலில் விஷம் வைத்திருந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் அதை பறித்து வீசி விட்டு அவரை மனு கொடுக்க அதிகாரிகளிடம் அழைத்துச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X