சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை அரசு மருத்துவமனையில்

Added : டிச 03, 2019
Advertisement

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுக்கு எதிரே ரூ.47 லட்சத்தில் கட்டிய பார்வையாளர்கள் தங்கும் அறை திறக்கப்படாமல் உள்ளதால், மக்கள் ரோட்டில் காத்திருக்கும் நிலை உள்ளது.இங்குள்ள மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவில் (சீமாங்க் சென்டர்) மாதத்திற்கு 200 பிரசவம் நடக்கிறது. இது தவிர பிரசவ கால முன் கவனிப்பு சிகிச்சைக்காக தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் வருகின்றனர். இங்கு கர்ப்பிணியுடன் ஒரு பெண் உதவியாளர் மட்டுமே தங்க முடியும். இதனால், பிரசவத்தின் போது கர்ப்பிணியுடன் வருவோர் 'சீமாங்க் சென்டருக்கு' முன் காத்து கிடக்கின்றனர். அங்கு உட்கார வசதிகளும் இல்லை. இதனால் மரத்தடியில் மக்கள் அமர்ந்துள்ளனர்.எனவே இங்கு ஓய்வு அறை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மத்திய அரசு நகர்புற வளர்ச்சி திட்ட நிதி ரூ.47 லட்சத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் மூலம் இந்த அறை கட்டப்பட்டது. இப்பணி முடிந்து பல மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் மழை, வெயிலில் மரத்தடியில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் தங்கும் அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.* டீன் ரத்தினவேல் கூறியதாவது, இந்த அறை மத்திய அரசு நிதியில் நகராட்சியினர் கட்டி கொடுத்துள்ளனர். இதை திறக்க கோரி கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன்.* நகராட்சி கமிஷனர் அயூப்கான் கூறியதாவது, கட்டுமான பணிகள் முடிந்துவிட்டது. விரைவில் தங்கும் அறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X