சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குறைதீர் முகாமை நிறுத்திய சிவகங்கை கலெக்டர்

Added : டிச 03, 2019
Advertisement

சிவகங்கை:ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் சிவகங்கையில் நடந்த பொது குறைதீர் முகாமை பாதியிலேயே நிறுத்திவிட்டு கலெக்டர் வெளியேறினார்.நேற்று காலை 10:00 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் காலை 10:00 மணிமுதல் பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்திருந்தனர். தேர்தல் அறிவிப்பு தகவல் கிடைத்ததை தொடர்ந்து காலை 11:00 மணியுடன் முகாமை நிறுத்திவிட்டு கலெக்டர் ஜெயகாந்தன் வெளியேறினார். இதனால் கலெக்டரை சந்தித்து மனுகொடுக்கலாம் என்று வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X