பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - சேலம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
கிணற்றில் துணி துவைக்க தடை தேவை: சங்ககிரி, மலைக்கோட்டை வீரபத்திரன்கோவில் முன் உள்ள கிணறு, சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பி உள்ளது. அந்த நீரை, சுற்றுலா பயணியர், பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு சில பெண்கள், அதில் துணிகள் துவைத்து நீரை அசுத்தம் செய்கின்றனர். இதனால், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள், கிணற்றில் துணி

கிணற்றில் துணி துவைக்க தடை தேவை: சங்ககிரி, மலைக்கோட்டை வீரபத்திரன்கோவில் முன் உள்ள கிணறு, சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பி உள்ளது. அந்த நீரை, சுற்றுலா பயணியர், பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு சில பெண்கள், அதில் துணிகள் துவைத்து நீரை அசுத்தம் செய்கின்றனர். இதனால், தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள், கிணற்றில் துணி துவைக்க தடை விதித்து போர்டு வைக்க வேண்டும்.

- எஸ்.சின்னபையன், சங்ககிரி.

சாலை நடுவிலுள்ள மின்கம்பத்தால் அவதி: மேட்டூர், 29வது வார்டு, பொன்னகர் மேற்கு வீதியில், ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், 20 அடி அகல சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. அதை சாலையோரம் பொருத்த, நகராட்சி நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. விபத்து, நோயால் பாதித்தவர்களை ஏற்றி செல்வதற்கு ஆம்புலன்ஸ் கூட வீதியில் வர முடியவில்லை. இடையூறாக இருக்கும் கம்பத்தை அகற்ற வேண்டும்.

- சி.டேவிட்பால், மேட்டூர் அணை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X