ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலையில், கடந்த பிப், 2018 முதல், தேர்வாணையராக (பொறுப்பு) பல்கலை கணிதவியல் துறை பேராசிரியர் முத்துசாமி பணிபுரிந்து வந்தார். சொந்த காரணங்களுக்காக, பொறுப்பிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து நேற்று விலகினார். இதையடுத்து, துணைவேந்தர் குழந்தைவேல் தலைமையில், நேற்று மாலை புதிய தேர்வாணையராக (பொறுப்பு) பல்கலை உளவியல் துறை தலைவரும், பேராசிரியருமான கதிரவன் பொறுப்பேற்றார். விழாவில், பதிவாளர் (பொ) தங்கவேல் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.