பொது செய்தி

தமிழ்நாடு

ஒதுக்கிய வீட்டு மனையை கிரயம் செய்து கொடுக்க கோரி மனு

Added : டிச 03, 2019
Advertisement

சேலம்: சேலம், ஆவின் நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட பலர், நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்தனர். கோரிக்கை மனுவை அதற்கான பெட்டியில் செலுத்திய பின், அவர்கள் கூறியதாவது: இரும்பாலை செல்லும் சாலை, தளவாய்பட்டியில் ஆவின் நிறுவனத்துக்கு, 1979ல், நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதற்காக, 25 குடும்பத்தினர் நிலம் வழங்கினர். அதற்கு ஈடாக, 38 வீட்டுமனை இலவசமாக வழங்கப்பட்டது. தலா, 3 சென்ட் அளவில் வழங்கப்பட்ட இடம், 40 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நபரின் பெயருக்கு, கிரயம் செய்யப்படவில்லை. இன்னமும், ஆவின் நிறுவனம் பெயரிலேயே இருப்பதால், அதை மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. கடந்த 1987 ல், நடந்த ஆவின் நிர்வாகக்குழு கூட்டத்தில், நிறுவனம் சார்பில் கிரயம் செய்து கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, 1997 ல், மனைதாரர்களை நேரில் அழைத்து, பின், திருப்பி அனுப்பி விட்டது. எனவே, மனைதாரர் பெயரில் கிரயம் செய்து கொடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X