பொது செய்தி

தமிழ்நாடு

30 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டம்: பழமையான கோவிலில் டிச., 6ல் பிம்ப பாலாலயம்

Added : டிச 03, 2019
Advertisement

ஓமலூர்: பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில், 30 ஆண்டுக்கு பின் கும்பாபி?ஷகம் நடத்த திட்டமிட்டு, வரும் டிச., 6ல், பிம்ப பாலாலயம் நடக்கவுள்ளது.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி, லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் கோவில், அகழ்வாராய்ச்சித்துறை அறிவிப்பின்படி, 800 ஆண்டு கால பழமையான கோவில், 1.5 ஏக்கரிலுள்ள கோவில் பின்புறம், தெப்பக்குளம் உள்ளது. கடைசியாக, 1989, ஜூலை, 5ல் கும்பாபி?ஷகம் நடந்தது. ஊர்மக்கள், கோவிலை சீரமைக்க வலியுறுத்தினர். இதனால், 30 ஆண்டுக்கு பின், பக்தர்கள், உபயதாரர்கள் சார்பில், முதல்கட்டமாக, 80 லட்சம் ரூபாய்க்கு, திருக்கோவில் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து, வண்ணம் பூசுதல், குடிநீர் தொட்டி அமைத்தல், தரைத்தளம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கவுள்ளன. அதற்காக, டிச., 6ல், கோவிலிலுள்ள, 70 அடி உயரமுள்ள ராஜகோபுரம், சபா மண்டபம், ஆண்டாளர் சன்னதி, விஸ்வக்சேனர், விஷ்ணுதுர்கை, கருடாழ்வார் சன்னதி, மேற்குபுற விமானம், சொர்க்கவாசல் விமானங்களுக்கு, காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள், 'பிம்ப பாலாலயம்' (சுவாமி இறக்குதல்) நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X