பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் திருப்பணிகளை துரிதப்படுத்து இல்லையேல் தேர்தல் புறக்கணிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

சேலம்: சேலத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக, அகில பாரத ஹிந்து மகாசபா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சபாவின் தமிழ்மாநில தலைவர் பாலசுப்ரமணியன் அளித்த பேட்டி: சேலத்தில், அறநிலையத்துறை இணை ஆணையர், அடிக்கடி மாற்றப்படுவதால் திருப்பணி வேலைகள் முடங்கி உள்ளன. உடனடியாக இணை ஆணையரை நியமித்து, கோட்டை மாரியம்மன் கோவில், சுகவனேஸ்வரர் கோவில் வேலைகளை துரிதப்படுத்த வேண்டும். புதிதாக செய்த தேரில், சில பகுதிகள் சேதமாகியுள்ளன. அதில், ஊழல் நடந்துள்ளதால், உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை தேவை. குகை, முருகன் கோவில் பாலாலயம் செய்ததோடு சரி. 17 ஆண்டாக கும்பாபி?ஷகம் நடத்தவில்லை. மயில்சிலை சேதமாகிவிட்டது. தூயபாரதம் வலியுறுத்தி வரும் நிலையில், கோவில் சுற்றுப்புற பகுதி, அசுத்தமாக உள்ளது. எனவே, தூய்மைபணி மேற்கொண்டு, விரைவில் கும்பாபி?ஷகம் நடத்த வேண்டும். இல்லையேல், தேர்தலை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X