பொது செய்தி

தமிழ்நாடு

வலசக்கல்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

ஆத்தூர்: வலசக்கல்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், நீர் வழிந்தோடும் காப்புத்தளம் கான்கிரீட் விரிசல் ஏற்பட்டு, உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அடுத்த பச்சமலை பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனால், சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பச்சமலை அடிவாரத்தில், 100 ஏக்கரில் உள்ள வலசக்கல்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. ஏரி முழுவதும் நிரம்பி வழிந்தோடும் வழிப்பாதையில் உள்ள காப்புத்தளத்தின் கான்கிரீட் பகுதி உடைந்து, கல்லாறு கரையில் உள்ள விளைநிலங்களில் தென்னை, பாக்கு, வாழை பயிர்கள் அடித்துச் சென்றன. தொடர் மழை பெய்ததால், காப்புத்தள கான்கிரீட் முழுமையாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கலெக்டர் ராமன் தலைமையில், டி.ஆர்.ஓ., திவாகர், கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், உடைப்பு ஏற்பட்ட காப்புத்தளத்தின் பகுதியை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியதாவது: கடந்த, 1984ல், ஏரி நிரம்பி தண்ணீர் வழிந்தோடும் காப்புத்தளமும், 2000ல், மதகும் உடைந்தது. 2013-16ல், ஏரி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏரி நிரம்பினால் காப்புத்தளத்தில் வினாடிக்கு, 6,500 கன அடி தண்ணீர் வெளியேறும். இன்று (நேற்று), 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. காப்புத்தளம் அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், ஏரிக்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். கலெக்டர் ராமன் கூறுகையில், ''காப்புதளம் கான்கிரீட், 10 மீட்டர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தண்ணீர் குறைந்ததும் சேதம் குறித்து அளவீடு செய்து, புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X