பொது செய்தி

தமிழ்நாடு

பலே மோசடி மன்னன் குண்டாஸில் கைது

Added : டிச 03, 2019
Advertisement

சேலம்: சேலத்தில், பல கோடி ரூபாய் மோசடி செய்த, பலே ஆசாமி நேற்று குண்டர் சட்டத்தில், கைது செய்யப்பட்டுள்ளார். சேலம், சூரமங்கலம், ரெட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணிவண்ணன்,38. இவர், ஆர்.எம்.வி., குரூப் ஆப் கம்பெனீஸ் பெயரில், நிறுவனம் துவங்கி முதலீடு செய்தால், 100 நாட்களில், இரட்டிப்பு தொகை தருவதாக நம்ப வைத்து, மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். தவிர, ஊறுகாய், மசால் வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கு, பகுதி வாரியாக வினியோக உரிமை தருவதாக, ஆசை வார்த்தை கூறி, ஸ்டார் ஓட்டல்களில் கூட்டம் நடத்தி, சமூகத்தில், தன்னை பெரிய வணிகராக, அவராகவே, அடையாளப்படுத்தி வலம் வந்துள்ளார். அதன்மூலம், 350க்கும் மேற்பட்டோரிடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டியதோடு, பணத்தை திருப்பி கேட்டவருக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மோசடிக்கு, அவரது மனைவி இந்துமதி, 35, உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக, மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வெளியான திடுக் தகவலையடுத்து, தம்பதியை கைது செய்தனர். தொடர்ந்து, மணிவண்ணன் மோசடியில் ஈடுபடுவதை தடுக்க, அவர் குண்டர் சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X