ஓமலூர்: பல்கலையில் குறைகளை நிவர்த்தி செய்ய, மூன்று குழுக்களை அமைத்து பதிவாளர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார். சேலம், பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் உத்தரவுப்படி, பல்கலை ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆசிரியர்கள் குறைகளை கேட்டறிய, கணிதவியல் துறை பேராசிரியர் முத்துசாமி தலைமையில், வேதியியல் துறை தலைவர் ராஜ், உணவு அறிவியல் துறை தலைவர் பூங்கொடிவிஜயகுமார், பொருளியல் துறை உதவி பேராசிரியர் ஜெயராமன். மாணவர்களின் குறைகளை தீர்க்க, இதழியல் துறை பேராசிரியர் நந்தகுமார் தலைமையில், கணிதவியல் துறை தலைவர் செல்வராஜ், நுண்ணுயிரியல் துறை தலைவர் பாலகுருநாதன், ஆங்கிலத்துறை தலைவர் சங்கீதா. பல்கலை நிர்வாக பணியாளர்கள் குறைகளை கேட்டறிய, புவி தகவல்அமைப்பியல் மைய இயக்குனர் அன்பழகன் தலைமையில், தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி, வேதியல் துறை உதவிப் பேராசிரியர் லலிதா, நிலவியல் துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ் ஆகியோரை, பதிவாளர் தங்கவேல் நியமித்து, கடந்த, 29ல் உத்தரவை வெளியிட்டுள்ளார்.