பொது செய்தி

தமிழ்நாடு

சிண்டிகேட் கொள்முதலுக்கு கடும் எதிர்ப்பு: மரவள்ளிகிழங்கு அறுவடை நிறுத்தி வைப்பு

Added : டிச 03, 2019
Advertisement

சேலம்: மரவள்ளி கிழங்கு சிண்டிகேட் முறை கொள்முதலுக்கு, விவசாயிகள், வியாபாரிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து, அறுவடையை காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், காட்டுக்கோட்டை பகுதி மரவள்ளி விவசாயிகள், கிழங்கு வியாபாரிகள் பலர், நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். கோரிக்கை மனுவை, அதற்கான பெட்டியில் செலுத்திய பின், அவர்கள் கூறியதாவது: கடந்த, 50 ஆண்டுகளாக சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், கிழங்கு வியாபாரம் செய்து வருகிறோம். 5,000க்கும் அதிகமானோர், இத்தொழிலை நம்பி உள்ளனர். தற்போது, ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள், சிண்டிகேட் அமைத்து, அந்தந்த பகுதி சங்கத்தில் பதிவு செய்து, அதன் மூலமாகவே குறிப்பிட்ட ஆலைகளுக்கு கிழங்கை விற்பனை செய்ய நெருக்கடி கொடுக்கின்றனர். சேகோ சர்வ் மூலம், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், தரம் அறிதல், விலை நிர்ணயம், பணம் பட்டுவாடா ஆகியவை தாமதமாகி, விவசாயிகள் பாதிக்கப்படுவர், குறிப்பாக, தரம், விலை நிர்ணயத்தில், நேர்மை இருக்காது. அதோடு, நாங்களும் பாதிக்கப்படுவோம். எனவே, பழையபடி, விவசாயிகளிடமிருந்து, வியாபாரிகள் நேரடி கொள்முதல் முறையை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். அதுவரை, கிழங்கு அறுவடையை, காலவரையின்றி, டிச.,1ல் இருந்து நிறுத்தி வைத்துள்ளோம். தற்போது, மகசூல் காலம் என்பதால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X