சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீரோடை வாய்க்கால் மீண்டும் உடைப்பு; விசாரணைக்கு வந்த எஸ்.ஐ.,யை தாக்க முயற்சி

Added : டிச 03, 2019
Advertisement

கெங்கவல்லி: நீரோடை வாய்க்கால் மீண்டும் உடைக்கப்பட்டது குறித்து, விசாரணை செய்ய வந்த எஸ்.ஐ.,யை, அப்பகுதியினர் வாக்குவாதம் செய்து, தாக்க முயற்சி செய்தனர்.
கெங்கவல்லி சுவேத நதியில் இருந்து, நடுவலூர் நீரோடை வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்கிறது. இரு வாரங்களுக்கு முன், பொதுமக்கள், பாசன விவசாயிகள் மூலம் நீரோடை வாய்க்காலை சீரமைத்தனர். சில தினங்களாக பெய்து வரும் மழையில், சுவேத நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து, நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம், செம்படவர் குட்டை பகுதியை சேர்ந்தவர்கள், வாய்க்காலை உடைத்து தண்ணீரை நிறுத்திவிட்டனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள், நேற்று முன்தினம் கெங்கவல்லி போலீசில் புகாரளித்தனர். அதன்பின், வாய்க்கால் உடைப்பு சரிசெய்து, நீரோடையில் தண்ணீர் சென்றது. நேற்று, மீண்டும் வாய்க்காலை உடைத்ததால், கெங்கவல்லி எஸ்.ஐ., சேகர், அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, சிலர் வாக்குவாதம் செய்து, எஸ்.ஐ.,யை தாக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமனுக்கு புகார் சென்றது. நீரோடை வாய்க்கால் உடைத்து, சேதப்படுத்திய நபர்கள் மற்றும் எஸ்.ஐ.,யை தாக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பொதுப் பணித்துறை மற்றும் போலீசாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X