பொது செய்தி

தமிழ்நாடு

புகார் வாங்க மறுத்து அலட்சியம்: எஸ்.ஐ., - சிறப்பு எஸ்.ஐ., மாற்றம்

Added : டிச 03, 2019
Advertisement

சேலம்: திருட்டு வழக்கில் புகார் வாங்க மறுத்து, மனுதாரரை அலட்சியம் செய்ததால், எஸ்.ஐ., -சிறப்பு எஸ்.ஐ.,. ஆகியோர், நேற்று மாநகர ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சங்ககிரியை சேர்ந்த சரவணன் மனைவி சாந்தி, 45. இவர், உறவினர் வீட்டு வி?ஷசத்துக்காக, நேற்று சேலம் சூரமங்கலத்துக்கு வந்துள்ளார். பின், விழா முடிந்ததும், தான் அணிந்திருந்த, 10 பவுன் நகையை கழற்றி, ?ஹண்ட் பேக்கில் வைத்து கொண்டு, ஊருக்கு கிளம்ப டவுன் பஸ்சில், புதிய பஸ் ஸ்டாண்ட் வந்துள்ளார். அப்போது, ?ஹண்ட் பேக்கில் இருந்து, நகை மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து மதியம், 1:45 மணியளவில், பள்ளப்பட்டி போலீசில் புகாரளிக்கப்பட்டது. பணியில் இருந்த எஸ்.ஐ., அயூப்கான், சிறப்பு எஸ்.ஐ., கோவிந்தராஜ் ஆகியோர், புகாரை விசாரிக்காமல் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, சாந்தியை காக்க வைத்து அலட்சியப்படுத்தி உள்ளனர். அவர், மீண்டும் நினைவூட்டியும், கண்டு கொள்ளாத போலீசார், சூரமங்கலத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். சூரமங்கலம் போலீசார், சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கி, விசாரித்துள்ளனர். பள்ளப்பட்டி போலீசார், புகார்மனு வாங்க மறுத்து, அலட்சியப்படுத்தியது பற்றி, கமிஷனர் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து, அயூப்கான், கோவிந்தராஜ் ஆகியோரை, மாநகர ஆயுதப்படைக்கு மாற்றி, கமிஷனர் செந்தில்குமார், உடனடியாக உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X