சேலம்: சேலம், சூரமங்கலம் அடுத்த நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் திலக், 44. இவர், ஊட்டி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். நேற்று முன்தினம், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். நேற்று காலை, 10:00 மணியளவில், இன்னொரு சாவியுடன் வேலைக்கார பெண், துணி துவைக்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி, மொபைல் மூலம், சென்னை சென்ற டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஊர் திரும்பிய அவர், வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 30 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் திருட்டுபோனது தெரிந்தது. இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.