சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நங்கவள்ளியில் கார் மோதி முதியவர் பலி

Added : டிச 03, 2019
Advertisement

ஓமலூர்: மகனுக்கு இருமுடி கட்டும் விழாவில் பங்கேற்று, திரும்பிய தந்தை கார் மோதி பலியானார். நங்கவள்ளி பெரியசோரகையை சேர்ந்தவர் இருசப்பன், 88. இவரது மகன் செல்வம், 45, நேற்று முன்தினம் சபரிமலை செல்வதற்காக, மாட்டுக்காரன் வளைவில் உள்ள பெருமாள் கோவிலில், இருமுடி கட்டினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, காளியம்மன் கோவில் அருகே இரவு, 9:00 மணியளவில் இருசப்பன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தாரமங்கலத்தலிருந்து, நங்கவள்ளியை நோக்கி வந்த மாருதி வேகன்.ஆர்., கார் மோதியதில், பலத்த காயமடைந்தார். அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X