சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் கொலை வழக்கு: சேலத்தில் ஒருவர் சரண்

Added : டிச 03, 2019
Advertisement

சேலம்: ஒகேனக்கல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர், நேற்று சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2018 ல், நடந்த கொலை வழக்கு ஒன்றில், சங்ககிரி அருகில் உள்ள தேவண்ணகவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஜெயராமன், 47, என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இவர் நேற்று சேலம் ஜே.எம்.எண்- 2ல், சரண் அடைந்தார். * திண்டுக்கல் நகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வீடு புகுந்து தாக்கிய வழக்கில், தேடப்பட்டு வந்த மேட்டூர் அணை, காமராஜ் நகர் கோனூரை சேர்ந்த அருள் செல்வன் என்ற முருகனை, 40, போலீசார் தேடி வந்தனர். இவர், நேற்று சேலம் ஜே.எம்.எண் - 2ல், சரண் அடைந்தார். இருவரையும் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் சிவா உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X