சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை: கைவரிசை கும்பலை தேடும் போலீஸ்

Added : டிச 03, 2019
Share
Advertisement
சேலம்: சேலத்தில், அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையடித்து, கைவரிசை காட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், திருச்சி பிரதான சாலை, தாதகாப்பட்டியை சேர்ந்தவர் மணி, 55. பனியன் கம்பெனி ஊழியர், இவர், நேற்று முன்தினம் இரவில், வீட்டுக் கதவை தாழிடாமல், குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, உள்ளே புகுந்த கும்பல், பீரோவை லாவகமாக திறந்து, அதில் வைத்திருந்த, 40

சேலம்: சேலத்தில், அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையடித்து, கைவரிசை காட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், திருச்சி பிரதான சாலை, தாதகாப்பட்டியை சேர்ந்தவர் மணி, 55. பனியன் கம்பெனி ஊழியர், இவர், நேற்று முன்தினம் இரவில், வீட்டுக் கதவை தாழிடாமல், குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, உள்ளே புகுந்த கும்பல், பீரோவை லாவகமாக திறந்து, அதில் வைத்திருந்த, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் மொபைல்போனை திருடி சென்றுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த பூ வியாபாரி சாந்தி, 50, என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், உமா, 60, வீட்டின் பூட்டை உடைத்து, டிவிடி பிளேயரை கும்பல் எடுத்து சென்றுள்ளது. அடுத்தடுத்து, மூன்று வீடுகளில் நடந்த கொள்ளை தொடர்பாக, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X