மழையால் நிரம்பும் தடுப்பணை: குறைந்த உயர தடுப்புச்சுவரால் ஆபத்து

Added : டிச 03, 2019
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வருவதால், குறைந்த உயரமே உள்ள தடுப்புச்சுவரால் ஆபத்துக்கு வாய்ப்புள்ளதால், அதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான, பனமரத்துப்பட்டி ஏரி, 2,400 ஏக்கருடையது. போதமலை, கிடமலை தொடரில் பெய்யும் மழைநீர், குரால்நத்தம் வழியாக, பனமரத்துப்பட்டி ஏரியை அடையும். பருவ மழையால், நீர் வரத்து தொடங்கியுள்ளதால்,

பனமரத்துப்பட்டி: தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வருவதால், குறைந்த உயரமே உள்ள தடுப்புச்சுவரால் ஆபத்துக்கு வாய்ப்புள்ளதால், அதன் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான, பனமரத்துப்பட்டி ஏரி, 2,400 ஏக்கருடையது. போதமலை, கிடமலை தொடரில் பெய்யும் மழைநீர், குரால்நத்தம் வழியாக, பனமரத்துப்பட்டி ஏரியை அடையும். பருவ மழையால், நீர் வரத்து தொடங்கியுள்ளதால், ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன. குரால்நத்தத்தில், கட்டபுளியமரம் பஸ் ஸ்டாப் - முத்தானூர் சாலை அருகே, மழைநீர் ஓடையில், தடுப்பணை உள்ளது. சாலைக்கும், ஓடைக்கும் இடையே, குறைந்த உயரத்தில் தடுப்புச்சுவர் உள்ளது. வாகனங்கள் சறுக்கி, ஓடையில் விழ வாய்ப்புள்ளது. அத்துடன், அந்த வழியாக, அரசு தொடக்கப்பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தண்ணீரில் கல் வீசி விளையாடுகின்றனர். தடுப்புச்சுவர் தரைமட்டத்தில் உள்ளதால், குழந்தைகள் தவறி விழும் ஆபத்துள்ளது. அதனால், அதன் உயரத்தை உயர்த்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X