அடையாளமில்லா வேகத்தடையால் தவிப்பு: ஈரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, செங்குந்தர் பள்ளி அருகே, சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அடையாளம் காட்டும் விதமாக வெள்ளை பெயின்ட் அடித்தனர். ஆனால், இரண்டு நாட்களிலேயே அழிந்து விட்டது. இதனால் பகல் நேரத்திலேயே வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேகத்தடை குறித்த அறிவிப்பு அல்லது பெயின்ட் அடித்து, தவிப்பை போக்க வேண்டும்.
- என்.மாதேவா, ஈரோடு.
கழிவுநீரால் கொசு தொல்லை அதிகரிப்பு: மொடக்குறிச்சி யூனியன், சின்னியம்பாளையம் பஞ்., பாலாஜி கார்டனில், மழைநீர் மற்றும் கழிவுநீர் தேக்கத்தால் கொசுத்தொல்லை அதிகரித்து, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பஞ்., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், கொசு மருந்து அடிக்கவில்லை. கிருமி நாசினி பவுடர் தெளிக்காமல் மெத்தனம் காட்டு கின்றனர். யூனியன் நிர்வாகம், கொசு மருந்து அடிக்க, கிருமி நாசினி பவுடர் தெளிக்க வேண்டும்.
- ப.சந்திரசேகர், பாலாஜி கார்டன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE