பொது செய்தி

தமிழ்நாடு

பவானி ஆற்றில் வெள்ளம்: கொடிவேரியில் குளிக்க தடை

Added : டிச 03, 2019
Advertisement

கோபி: பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. பவானிசாகர் அணை, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக, முழு கொள்ளளவை நேற்று எட்டியது. இதனால் அணைக்கு வரும், 30 ஆயிரம் கன அடி நீர், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடிவேரி தடுப்பணை வழியே தண்ணீர் செல்வதால், தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க, நேற்று தடை விதிக்கப்பட்டது. அடசபாளையம், நஞ்சை புளியம்பட்டி, பெரிய கொடிவேரி அணை பகுதிகளில், வருவாய் துறையினர், தண்டோரா மூலம், மக்களை உஷார்படுத்தினர். இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும், இக்கரைநெகமம், அய்யப்பன் கோவில் வீதி, ஆர்.எம்.பிநகர் உள்ளிட்ட பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு, ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X