பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : டிச 03, 2019
Advertisement

மின்கம்பத்தில் சிக்கிய ஓலை: நம்பியூர் - திருப்பூர் சாலையில், நம்பியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம், விளை நிலங்களுக்கு செல்லும், மண் சாலை செல்கிறது. இவ்வழியில் ஒரு மின்கம்பத்தில், எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு பனை ஓலை, வசமாக சிக்கியுள்ளது. சாலையில் செல்லும் பலரும், ஓலையை பார்த்து அதிசயித்து செல்கின்றனர். மின் கசிவு ஏற்படுமா அல்லது வேறு வில்லங்கம் வருமா? என்பது மின் வாரியத்துக்கே தெரியும். நம்பியூர் பக்கம் போனால், ஓலையை அகற்றி வீசினால் சரி.
வீணாகும் வாகனம்; ஜந்துக்கள் புகலிடம்: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், வருவாய் துறையினர் பறிமுதல் செய்த, இலகு ரக வாகனங்கள் நீண்ட காலமாக நிற்பதால், விஷஜந்துக்களின் புகலிடமாகி விட்டன. சிலர் உதிரி பாகங்களை கழற்றி, தூக்கி செல்கின்றனர். சில வாகனங்கள் நல்ல முறையில் உள்ளன. ஏதாவது உருப்படியா செய்யலாம். ஆனால், மெத்தனப் போக்கும், வேலைப்பளுவும் கூடும் நிலையில், ஓரங்கட்டிய வாகனங்கள் மீது, அதிகாரிகளுக்கு எப்படி அக்கறை வரும்?

குழியை மூடிய நீர்; பள்ளத்தால் அபாயம்: ஈரோடு, சுவஸ்திக் கார்னரில் இருந்து, செல்லும் சத்தியமங்கலம் சாலையில், நிரந்தரமான பள்ளம் உள்ளது. பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்திலும் மழை நீர் நிரம்பி, வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் கண்டுபிடிக்க முடியாதபடி தேங்கியுள்ளது. இவ்விடத்தில் விபத்து நடக்கும் முன், பள்ளத்தை மூடி, பாதாள சாக்கடை இணைப்பு குழிகளையும் சீரமைத்து, விபத்து நிகழாமல் தடுக்க, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X