பொது செய்தி

தமிழ்நாடு

நிறைமாத கர்ப்பிணியை தொட்டில்கட்டி 5 கி.மீ., சுமந்த கணவன், உறவினர்கள்

Added : டிச 03, 2019
Advertisement

அந்தியூர்: ஆம்புலன்ஸ் வாகனம் வர முடியாததால், நிறைமாத கர்ப்பிணியை, தொட்டில் கட்டி, 5 கி.மீ., தூக்கிச் சென்ற சம்பவம், ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த, பர்கூர் வனப்பகுதியில், சுண்டப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ், 32; கூலி தொழிலாளி. இவரின் மனைவி, குமாரி, 22; நிறைமாத கர்ப்பிணியான குமாரிக்கு, நேற்று பிரசவ வலி எடுத்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, பர்கூரில் உள்ள 108 அவசரகால ஆம்புலன்சை அழைத்தனர். ஆனால், சுண்டப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால், சாலை, சேறு, சகதியாகி நடக்கவே சிரமப்படும் அளவுக்கு மாறியிருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் வருமா? என்று சந்தேகப்பட்டனர். இதையடுத்து வலியால் துடித்த குமாரியை, கணவர் மற்றும் உறவினர்கள், மூங்கில் மரத்தில் சேலையை தொட்டில் போல் கட்டி, அதில் அமரவைத்து, 5 கி.மீ., தூரமுள்ள மெயின் ரோட்டுக்கு, தோளில் சுமந்து வந்தனர். அப்போது கூட ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் பிக்-அப் வேனில் ஏற்றிக்கொண்டு, பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர். சிறிது தூரமே உள்ள நிலையில், ஆண் குழந்தை, வேனிலேயே பிறந்து விட்டது. பின் சுகாதார நிலையத்தில், தாய், சேய் சேர்க்கப்பட்டனர். நிறைமாத கர்ப்பிணியை, 5 கி.மீ., தூரம் தூக்கிச் சென்ற சம்பவம், பர்கூர் மலைப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X