பொது செய்தி

தமிழ்நாடு

உயர் மட்ட குழு அறிக்கையை மக்கள் ஏற்றனர்; கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம் ஓவர்?

Added : டிச 03, 2019
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் விவகாரத்தில், உயர் மட்டக்குழு அறிக்கையை, மக்கள் ஏற்றுக் கொண்டதால், பாதாள சாக்கடை திட்டப்பணியில் நிலவிய தொய்வு முடிவுக்கு வந்துள்ளது.
சத்தி நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டப்பணி நடந்து வருகிறது. கழிவுநீரை சுத்திகரிக்க, பவானி ஆற்றங்கரையோரம், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவானி நதிநீர் பாதுகாப்பு இயக்கம், தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சிகள், மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் கதிரவன், எஸ்.பி., சக்தி கணேஷ் தலைமையில், கடந்த மாதம், ஆலோசனை நடந்தது. இதையடுத்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில், உயர் மட்டக்குழு ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தனர். அறிக்கையில் 'பாதாள சாக்கடை திட்டத்தில், ஆற்றங்கரையில் அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையம் அதே இடத்தில் செயல்படும். அதே நேரத்தில் கழிவு சுத்திகரிக்கப்பட்டு, ஆற்றில் கலக்காமல், விவசாய நிலங்கள், ஆலைகள் மற்றும் வனப்பகுதிகளில் விடவேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, கலெக்டர் கதிரவன், எஸ்.பி., சக்தி கணேஷ் தலைமையில், மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன், உயர் மட்டக்குழு அறிக்கை குறித்து, சத்தியமங்கலத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உயர் மட்ட குழுவின் கருத்தை மக்கள் ஏற்றுகொண்டதால், பாதாள சாக்கடை திட்ட எதிர்ப்பு முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: பாதாள சாக்கடை கழிவு நீரை, ஆற்றில் விடக்கூடாது என்பதுதான், எங்கள் போராட்டத்தின் நோக்கம். அதன் படியே உயர் மட்ட குழுவினரும் ஆய்வு செய்து, எங்கள் கருத்துகளை ஏற்றுக்கொண்டு, கழிவுநீரை ஆற்றில் கலக்காமல் இதர பகுதிகளுக்கு தருவதாக கூறியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X