இலவச மருத்துவ பரிசோதனை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

Added : டிச 03, 2019

அரூர்: அரூர் பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில், நேற்று இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. அரூர் அரசு மருத்துவமனை, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தர்மபுரி அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமை, அரூர் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் புகழேந்தி துவக்கி வைத்தார். முகாமில், எலும்பு மூட்டு, முதுகுவலி, மூட்டு தேய்மானம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட, 167 முதியோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், கண்புரை, கண்ணீர் அழுத்த நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை பரிசோதனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது. இதில், அரூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன், அறுவை சிகிச்சை நிபுணர் அருண் பிரகாஷ், கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X