பொது செய்தி

தமிழ்நாடு

தீர்த்தமலை கோவிலுக்கு ரோப் கார் வசதி கேட்டு பக்தர்கள் வேண்டுகோள்

Added : டிச 03, 2019
Share
Advertisement
அரூர்: தீர்த்தமலை மலைக்கோவிலுக்கு செல்ல, ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து

அரூர்: தீர்த்தமலை மலைக்கோவிலுக்கு செல்ல, ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில், பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில் புனித நீராட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மேலும், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மலை ஏற மிகவும் சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மலைக்கு செல்ல, ரோப் கார் வசதி செய்து தருவதுடன், சேதமடைந்துள்ள மலைப்பாதையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X