சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை மிரட்டி ஹெச்.எம்., பொய் புகார்: பள்ளியை பெற்றோர் முற்றுகை

Added : டிச 03, 2019
Advertisement

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, மாணவியரிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக ஆசிரியர் மீது, தலைமை ஆசிரியை பொய் புகார் அளித்ததாக கூறி, பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காமராஜர் நகரில், பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. அங்கு, மாணவியரிடம் பாலியல் தொந்தரவு புகாரில், கணித ஆசிரியர் பிரகாஷ்குமார், 54, கடந்த நவ.,29ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில், மாணவியை, தலைமையாசிரியை சிவகாமிசுந்தரி, வற்புறுத்தி பொய் சொல்ல வைத்ததாக மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. முன்விரோதத்தில், ஆசிரியரை பழிவாங்க தலைமையாசிரியை, மாணவியை பயன்படுத்தி, பொய் குற்றச்சாட்டு கூற வைத்துள்ளார். அவர் நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி, நேற்று பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். தகவலின்படி, பாலக்கோடு டி.எஸ்.பி., சீனிவாசன், தாசில்தார் வெங்கடேஷ்வரன், சி.இ.ஓ., முத்துகிருஷ்ணன் ஆகியோர் பள்ளிக்கு விரைந்தனர். மாணவியின் பெற்றோர்கள் எழுத்து பூர்வமாக, தலைமையாசிரியர் சிவகாமி சுந்தரி மீது புகார் கொடுத்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து சி.இ.ஓ., முத்துகிருஷ்ணனிடம் கூறுகையில், ''பள்ளி மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில், ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, மாணவியரை, தலைமையாசிரியர் சிவகாமி சுந்தரி தூண்டியதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆனால், மாணவியர் யாரும் அவ்வாறு புகார் கூறவில்லை. தலைமையாசிரியர் மீது, உரிய விசாரணை நடத்தி, புகார் உறுதி செய்யப்பட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X