பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : டிச 03, 2019
Advertisement

சுகாதார வளாகம் திறக்கப்படுமா? பாளேகுளியில் கடந்த, 2002ல், இரண்டு லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆறு மாதங்களில், தண்ணீர் பற்றாக்குறையால் பூட்டப்பட்டது. கடந்த, 2012ல், 2.17 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைத்தனர். ஆனாலும், இன்று வரை பயன்பாட்டில் இல்லை. இதனால் இப்பகுதி பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு, திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்.
மின்கம்பம் சேதம்; விபத்து அபாயம்: அகசிப்பள்ளி பஞ்., மேலேரிக்கொட்டாயில் சாலையோரம் உள்ள மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. சாலையோரம் மல்லிகை பூந்தோட்டத்தில் உள்ள இக்கம்பத்தின், அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால், இதன் அருகில் செல்ல மக்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். சேதமான இக்கம்பத்தை, பெரும் விபத்து ஏற்படும் முன் உடனே மாற்ற வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X