பொது செய்தி

தமிழ்நாடு

ஓமன் நாட்டில் எலக்ட்ரீஷியன் பணிக்கு 14ல் நேர்முக தேர்வு

Added : டிச 03, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: ஓமன் நாட்டில் எலக்ட்ரீஷியன் பணியில் சேர வரும், 14ல் சென்னையில் நேர்முக தேர்வு நடப்பதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஓமன் நாட்டில் உள்ள, முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய, ஐ.டி.ஐ., அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட பணி அனுபவம் பெற்ற எலக்ட்ரிகல் டெக்னீஷியன், எலக்ட்ரிகல் லைன்மேன் மற்றும் எலக்ட்ரீஷியன் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, பணி அனுபவத்திற்கேற்ப, 24 ஆயிரம் ரூபாய் முதல், 37 ஆயிரம் ரூபாய் வரை, மாத ஊதியத்துடன் விசா, மற்றும் ஓமன் நாட்டின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு இதர சலுகைகள் வெளிநாட்டு வேலை அளிப்போரால் வழங்கப்படும். இந்த பணிக்கான நேர்முக தேர்வு வரும், 14 மற்றும், 15 காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணிவரை அயல் நாட்டு வேலையளிப்பு நிறுவனம், திரு.வி.க., தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரியில் நடக்கிறது. நேர்முக தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் வரவேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள், இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X