பொது செய்தி

தமிழ்நாடு

171 அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, கெலமங்கலம், தளி ஒன்றியத்தில் உள்ள, 89 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், அசோக் லேலண்ட் என்ற தனியார் நிறுவனம் மூலம், கடந்த ஓராண்டாக காலை உணவு வழங்கி வருகிறது. இதனால், 9,000 மாணவ, மாணவியர் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். இத்திட்டத்தை விரிவாக்க, சூளகிரி, கெலமங்கலம், தளி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, கெலமங்கலம், தளி ஒன்றியத்தில் உள்ள, 89 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், அசோக் லேலண்ட் என்ற தனியார் நிறுவனம் மூலம், கடந்த ஓராண்டாக காலை உணவு வழங்கி வருகிறது. இதனால், 9,000 மாணவ, மாணவியர் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். இத்திட்டத்தை விரிவாக்க, சூளகிரி, கெலமங்கலம், தளி ஒன்றியத்தில் உள்ள மேலும், 171 பள்ளிகளை அசோக் லேலண்ட் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. அப்பள்ளிகளிலும், காலை உணவு வழங்கும் திட்டத்தை, அசோக் லேலண்ட் நிறுவனம் நேற்று துவங்கியது. தேன்கனிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த, துவக்க விழாவில், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிசந்திரா, மாணவ, மாணவியருக்கு, காலை உணவு வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம், 15 ஆயிரம் மாணவ, மாணவியர் தினமும் காலை உணவு சாப்பிட முடியும் என, அசோக் லேலண்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கட்குமார், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X