பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து மாற்றம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

Added : டிச 03, 2019
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை நகரில், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, வரும், 5 முதல், எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோடு, ஓசூர் ரோடு மற்றும் கெலமங்கலம் பைபாஸ் சாலை ஆகியவை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுவதாக, தேன்கனிக்கோட்டை போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேன்கனிக்கோட்டை சோதனைச் சாவடியை கடந்து வரும் மூன்று மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் வழியாக, தளி

ஓசூர்: தேன்கனிக்கோட்டை நகரில், போக்குவரத்து நெருக்கடியை குறைக்க, வரும், 5 முதல், எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோடு, ஓசூர் ரோடு மற்றும் கெலமங்கலம் பைபாஸ் சாலை ஆகியவை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுவதாக, தேன்கனிக்கோட்டை போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேன்கனிக்கோட்டை சோதனைச் சாவடியை கடந்து வரும் மூன்று மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் வழியாக, தளி ஜங்ஷன் ரவுண்டானா சென்று, அங்கிருந்து வலதுபுற சாலையில் திரும்பி, கெலமங்கலம் பகுதிக்கு செல்ல வேண்டும். தளி மற்றும் ஓசூரிலிருந்து வரும் வாகனங்கள், கோட்டை வாசல் அருகே திரும்பி, கெலமங்கலம் பைபாஸ் ரோடு, நேதாஜி ரோடு, எம்.ஜி.,ரோடு வழியாக சென்று, பஸ் ஸ்டாண்டிற்கு வர வேண்டும். வியாபாரிகள் தங்களுக்கு வரக்கூடிய சரக்கு வாகனங்களை, காலை, 5:00 மணி முதல், 7:00 மணி வரையும், மதியம், 12:00 முதல், 2:00 மணி வரையும், இரவு, 8:00 முதல், 10:00 மணி வரையும் மட்டுமே நிறுத்தி, பொருட்களை இறக்கிக்கொள்ள வேண்டும். ஒருவழிப்பாதையில், இருசக்கர வாகனங்கள் தவிர, வேறு வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என, போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் அறிய, தேன்கனிக்கோட்டையில் வாகன ஓட்டிகள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு, டி.எஸ்.பி., சங்கீதா தலைமையிலான போலீசார் நேற்று துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X