பொது செய்தி

தமிழ்நாடு

ரோஜா செடிகளில் 'டவுனியா' நோய் தாக்குதல்: 60 சதவீத உற்பத்தி பாதிப்பு; விவசாயிகள் கவலை

Added : டிச 03, 2019
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகளில், 'டவுனியா' நோய் தாக்குதல் தென்பட துவங்கி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டார சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, 475 ஹெக்டேரில் பசுமை குடில் அமைத்து, பல்வேறு வகை ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவ., மற்றும் டிச.,ல் வெயிலின் தாக்கம் குறைந்து, காற்றில் ஈரப்பதம் அதிகமாகி, பனியின் தாக்கத்தால்

ஓசூர்: ஓசூரில், சாகுபடி செய்யப்பட்டுள்ள ரோஜா செடிகளில், 'டவுனியா' நோய் தாக்குதல் தென்பட துவங்கி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்று வட்டார சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி, 475 ஹெக்டேரில் பசுமை குடில் அமைத்து, பல்வேறு வகை ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவ., மற்றும் டிச.,ல் வெயிலின் தாக்கம் குறைந்து, காற்றில் ஈரப்பதம் அதிகமாகி, பனியின் தாக்கத்தால் ரோஜா செடிகளில் 'டவுனியா' பூஞ்சை நோய் தாக்கம் ஏற்படும். ரோஜா செடிகளின் இலைகள் உதிர்ந்து, சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படும். அதேபோல் இந்தாண்டும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது: ரோஜா பசுமை குடில்களில், பகலில், 28 முதல், 30 டிகிரி, இரவில், 17 முதல், 18 டிகிரி வெப்பநிலை இருக்க வேண்டும். கடந்த, 15 நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால், 'டவுனியா' நோய் தாக்கம் தென்பட துவங்கி உள்ளது. கடந்த, 15 நாட்களில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் மட்டும், 50 முதல், 60 சதவீத மலர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா, 250 முதல், 300 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு பூவின் விலை, 12ல் இருந்து, 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. டிசம்பர் மூன்றாவது வாரத்தில், காதலர் தினத்தை குறி வைத்து, ரோஜா செடிகளில் கவாத்து பணி செய்ய வேண்டும். 'டவுனியா' நோய் பாதிப்பிலிருந்து மீள, மூன்று முதல், நான்கு மாதங்களாகும். எனவே, தோட்டக்கலைத்துறை தேவையான அறிவுரைகளை, விவசாயிகளுக்கு வழங்கி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X