சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொக்லைன் வாகனத்தில் டீசல் திருடிய இருவர் கைது

Added : டிச 03, 2019
Advertisement

ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே, பொக்லைன் வாகனத்தில் டீசல் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஆண்டாள் வாடியை சேர்ந்தவர் ஜெயமோகன், 29. கிட்டாச்சி பொக்லைன் வாகன டிரைவர்; கடந்த, 30 இரவு, உத்தனப்பள்ளி அடுத்த ராமாபுரம் அருகே உள்ள தனியார் கிரஷர் நிறுவனத்தில் நின்று கொண்டிருந்த கிட்டாச்சி பொக்லைன் வாகனத்தில் இருந்து, நான்கு பேர் கொண்ட கும்பல், 130 லிட்டர் டீசலை திருடியது. இதை பார்த்த டிரைவர் ஜெயமோகன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரை பிடித்தார். இருவர் தப்பியோடினர். இது குறித்து, நேற்று முன்தினம் உத்தனப்பள்ளி போலீசில் டிரைவர் ஜெயமோகன் புகார் செய்தார். விசாரணையில் அவர்கள், தேன்கனிக்கோட்டை தாலுகா, வரகானப்பள்ளியை சேர்ந்த சஞ்சீவன், 28, முரளி, 28, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 130 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய வரகானப்பள்ளியை சேர்ந்த முனுசாமி, லட்சுமணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X