பொது செய்தி

தமிழ்நாடு

சிறையில் நளினி, முருகன் தொடர் உண்ணாவிரதம்

Added : டிச 03, 2019
Advertisement

வேலூர்: வேலூர் சிறையில், நளினி, முருகன் தொடந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் மற்றும் கருணை கொலை செய்ய அனுமதிக்ககோரி கடந்த, 28 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள அவரது கணவர் முருகன், நேற்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவரிடமும், சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, வேலூர் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் நேற்று முருகனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை வரும், 16க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, முருகன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X