சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி மோசடி செய்த தனியார் நிறுவனம்

Added : டிச 03, 2019
Advertisement

ஆரணி: ஆரணி அருகே, தனியார் நிதி நிறுவனம் சீட்டு நடத்தி, ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக கூறி, நூற்றுக்குக்கும் மேற்பட்டோர், ஆரணி தாலுகா ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
மதுரை மாவட்டம், சொக்கிகுளத்தை தலைமையிடமாக கொண்ட, மதுரம் பிராபர்டீஸ் மற்றும் சென்னை பம்மலை தலைமையிடமாக கொண்ட, நலம் ரியல்டர்ஸ் என்ற, இரண்டு நிதி நிறுவனம் ஏஜென்டுகளை நியமித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விண்ணமங்கலம், நடுப்பட்டு, ஆகாரம் பகுதிகளில், 1,000 ரூபாய், 60 மாதம் கட்டினால், 90 ஆயிரம் கொடுப்பதாகவும், 500 ரூபாய் வீதம் கட்டினால், 45 ஆயிரம் கொடுப்பதாகவும், மக்களிடம் ஆசைவார்த்தை கூறி, ஏழு ஆண்டுகளாக, பணம் வசூலித்தனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்து, பணம் செலுத்தி வந்தனர். பணம் முதிர்வு காலம் முடிந்தும், அதற்குண்டான பணத்தை திருப்பி தரவில்லை. இது குறித்து, ஏஜென்டுகளிடம் கேட்ட போது, தலைமை அலுவலகத்தில் கேட்டு சொல்வதாக கூறி வந்தனர். ஆனால், கட்டிய பணம் இதுவரை தரப்படவில்லை. இதனால், ஏமாற்றப்பட்டதை அறிந்து, ஆரணி தாலுகா போலீஸ் ஸ்டேஷனை, நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X