பொது செய்தி

தமிழ்நாடு

'கல்வித்திறனை மதிப்பீடு செய்யவே 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு'

Added : டிச 03, 2019
Share
Advertisement
கோபி: ''மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டை மதிப்பீடு செய்யவே, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டுள்ளது,'' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி, லக்கம்பட்டி பேரூராட்சியில், ஏழு திட்டப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நடந்து முடிந்த

கோபி: ''மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாட்டை மதிப்பீடு செய்யவே, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டுள்ளது,'' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபி, லக்கம்பட்டி பேரூராட்சியில், ஏழு திட்டப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நடந்து முடிந்த சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஒரு வரலாற்றை படைத்துள்ளது. தொடர்ந்து, இந்த இயக்கம் மற்றும் இந்த தலைமை தான், தமிழகத்தில் இருக்க வேண்டுமென மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். வரும், 2021 தேர்தலிலும், அ.தி.மு.க., ஆட்சி தான் நிலைக்கும். ஐந்தாம் வகுப்பினருக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும். எட்டாம் வகுப்பினருக்கு, ஐந்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்படும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பினருக்கு, எதற்காக பொதுத்தேர்வு முறை? என்பது தான் கல்வியாளர்களின் கேள்வியாக உள்ளது. அரசு பள்ளிகளில் பயின்றவர்கள் குறைவாகவும், தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள் அதிகமாகவும், நீட் தேர்வில் பங்கேற்பதாக, கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் மேம்பாடு குறித்து மதிப்பீடு செய்ய, பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X